Sri Mantra Peeteswari Veda Gurukulam Kumbakonam

Adhyapakar: Brahmasri Gururama Ghanapadigal

நியமாத்யயனம் மற்றும் குருகுலவாச அத்யயனம்

அத்யயனம் என்பது வெறும் ‘மனப்பாடம் செய்து கற்பது’ மட்டும் அல்ல. அத்யயனம் என்பது ஒரு தபஸ். ஏகாக்ர சிந்தனையோடு ஆஹாரம், ஆச்சாரம், விவஹாரம், காலம் போன்ற பல நியமங்களோடு வேதத்தை வருஷ கணக்கில் குரு முகமாக சிக்ஷை பெறவேண்டும்.


இந்த மாதிரி வேத அத்யயனம் செய்வதற்கு வழிகள் பல. நியமாத்யயனம், குருகுல வாசம், வேதபாடசாலை என வழிகள் உண்டு. தற்காலத்தில் குழந்தைகள் வேத பாடசாலையில் சேர்ந்து சிறந்தமுறையில் அத்யயனம் செய்வதை: நாம் நிறைய கேள்வி பட்டுள்ளோம். மேலும் இரண்டு விதமான பத்ததிகள் வேதத்தை விதிப்படி அத்யயனம் செய்யவதற்கு உள்ளது. இவைகள் மிகவும் உசத்தியானதும்கூட. அவற்றை பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.


1. நியமாத்யயனம்:
நியம அத்யயனம் என்றால் அப்பாவிடமே பிள்ளை வேதம் கற்பது. அதாவது தந்தை வேத விற்பன்னராக இருந்து தனது பையனுக்குத் தானே விதிப்படி வேதம் முழுவதையும் அத்யாபனம் செய்விப்பது. இது மிகவும் உசத்தியாக கருதப்படுகிறது. தந்தை பிள்ளை இருவருக்கும் கொடுப்பினை இருந்தால்தான் இது நடக்கும். இவர்கள் இருவருமே மிகவும் பாக்யவான்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இதை பற்றி மேலும் ஒரு தகவல். சாதாரணமாக வேதம் கற்று தருபவர் சிஷ்யனுக்கு குருவாவார் என்பதை நாம் அறிந்தது. ஆனால் இங்கு எவர் ஒருவர் தந்தையிடமே வேதம் அத்யயனம் செய்கிறாரோ அவருக்கு அப்பா வெறும் குருவாக மட்டும் கருதப்படுவதில்லை. அவருக்கு பட்டபெயர் என்னத் தெரியுமா? மகா குரு. ஆம் தந்தை மகாகுரு என கருதப்படுவார். பாக்யத்திலும் பாக்யம் அல்லவா.


2. குருகுலவாசம் :
இதுவும் உசத்தி மாத்திரம் அல்ல. சிறிது ச்ரமமான காரியம், அதுவும் இந்த கால கட்டத்தில். இதை பற்றி சற்று தெரிந்துக் கொள்ளுவோம். தனது பையனுக்கு உபநயன சம்ஸ்காரம் ஆனதும் யாராவது கனபாடிகள் மாதிரி வேதவிற்பன்னரை அனுகி அவரிடம் தனது குழந்தைக்கு வேதம் கற்று தருமாறு பிரார்தித்து தனது பையனை அவரிடம் விட்டுவிடுவது.


அதாவது அத்யாபகர் தனது இல்லத்திலேயே ஓரிரு குழந்தைகள வைத்துக்கொண்டு தனது சொந்த குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ளுவாரோ அதே மாதிரி இந்த குழந்தைகளையும் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டு அவர்களை சம்ரக்ஷித்து வேதத்தை கற்று தருவது. இதில் வேதம் சொல்லித்தரும் வேத அத்யாபகர் மாத்திரம் அல்ல, அவரது மனைவியின் பங்கும் மிக அதிகமாக இருக்கும்.. தனது சொந்தகுழந்தைகளுக்கு சமமாக வேதம் கற்க வந்துள்ள அந்த ஓரிரு குழந்தைகளையும் தாய் உள்ளத்தோடு அத்யாபகரின் மனைவி பார்த்துக்கொள்ளுவார்.


இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி செய்வது சாதாரண விஷயம் அல்ல. சற்று யோசித்து பாருங்கள். அந்த பெண்மணிக்கு பரந்த மனசும் விசாலமான ஹ்ருதயமும் தேவை. அம்மாதிரியான மனைவியை அடைந்த அந்த அத்யாபகர் மிகவும் கொடுத்துவைத்தவர் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த பெண்மணியை பெற்றெடுத்த தாய்தந்தையர்களும் பாக்யவான்களே.


இப்பேற்பட்ட குருகுல வாச முறையில் இன்று வேதத்தை ரக்ஷித்து வரும் அத்யாபகர்களுக்கும் நம்மால் முடிந்த சகாயத்தை நாம் செய்ய யோசிக்கலாம். வசதியுள்ளவர்கள் மாதாமாதம் ஒரு சிறிய தொகையையாவது அவர்களுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்யலாம். நமது திரவ்யம் அந்த குழந்தைகளுக்கு நித்யமும் குறைந்தது பால் செலவுக்காவது உபயோகப்படுமானால் நாம் தன்யர்கள் ஆவோம்.


வேத நெறி க்ஷீணித்து வரும் இக்காலகட்டத்தில் ஒரு சிலர் தங்களது வாழ்க்கையை வேதத்துக்காக அர்ப்பணித்து பிராசீனமான குருகுல வழியில் ஒரு மகா கைங்கர்யத்தை அமைதியாக செய்து வருகின்றார்கள். இதை மேற்கொண்டுள்ளவர்கள் அதிகம் வெளியில் பாராயனத்துக்கோ அல்லது வைதிக கார்யங்களுக்கோ செல்லவும் மாட்டார்கள்.ஏனெனில் அவர்களுக்கு நேரம் இருக்காது.
வருமானத்தை பற்றியும் அதிக சிந்தனை இருக்காது. அவர்களது எண்ணமெல்லாம் தன்னிடம் உள்ள குழந்தைக்கு வேத அத்யாபனம் செய்விப்பது ஒன்றுதான்.


எனக்கு பரிச்சயமானவர்களிலும் இம்மாதிரி குருகுலவாசத்தில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து வேத நெறியை பின்பற்றி வருபவர்கள் இருக்கின்றனர். இவர்கள் தியாகபுருஷர்கள். ஆதர்ஸ வேதவித்துக்கள்.


நமது புண்ணிய பாரத பூமியில் பல வேத பாடசாலைகள் நன்கு நடைபெற்று வருகின்றதை நாம் அறிவோம்.


வேத நெறி க்ஷீணித்து வரும் இக்காலகட்டத்தில் ஒரு சிலர் தங்களது வாழ்க்கையை வேதத்துக்காக அர்ப்பணித்து பிராசீனமான குருகுல வழியில் ஒரு மகா கைங்கர்யத்தை அமைதியாக செய்து வருகின்றார்கள். அவர்கள் எங்கு இருந்தாலும் நம்மால் முடிந்தால் சகாயம் செய்வது நமக்கு அளவில்லா புண்ணியம் தரும்.


சமீபத்தில் கனபாடிகள் ஒருவர், சலக்ஷண வித்வான், கும்பகோணத்தில் காவேரி கரை அருகில் ஆறு வேத வித்யார்த்திகளை தனது இல்லத்திலேயே வைத்துக்கொண்டு குருகுல பத்ததியில் சம்ரக்ஷணம் செய்து வருகிறார். அதில் இருவர் கன பாடம் அப்யாஸம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் பத பாடம், கிரம பாடம், இத்யாதிகள் கற்றுவரும் வித்யார்த்திகள்.


பாடசாலையின் பெயர் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத குருகுலம்.
அத்யாபகர் பெயர் பிரஹ்மஸ்ரீ குருராம கனபாடிகள்.


இந்த வேத அத்யாபகரான கனபாடிகள் தனது ஸ்வய முயற்சினால் ஆச்சார்யாள் அனுக்ரஹத்துடன் காவேரி நதி கரை அருகிலேயே ஒரு சிறு இடத்தை கிரயம் செய்து வாங்கியுள்ளார். அந்த இடத்தில் பாடசாலைக்கு ஒரு சிறிய கட்டிடத்தை பாடசாலைக்காக நிர்மானிக்க சங்கல்பம் செய்துள்ளார். அதன் நிமித்தம் வங்கியிலும் கடன் உதவிக்கு அனுகி வருகிறார். ஓரளவிற்கு கடன் கிடைக்கலாம். அதை தவிற கிட்டத்தட்ட மேலும் 25 லக்ஷம் தேவைப்படும் என அறிகின்றோம்.
இந்த தெய்வீக பணியில் பண உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களது காசோலையை ”ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வேத குருகுலம் (Sri Mantra Peeteswari Veda Gurukulam) எனும் பெயரில் கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பிவைக்கலாம்:


ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வேத குருகுலம்,
சோலையப்பன் தெரு,
136-C, 4-ம் படித்துறை
கும்பகோணம் - 612 001

Bank details:
Name: Sri Mantra Peeteswari Veda Gurukulam
Bank: City Union Bank
Branch: Chennai Ashok Nagar
SB Account No,: 500101011076680
IFSCode: CIUB00001030


வேத பாடசாலை, நியமாத்யயனம் அல்லது குருகுல வாசம் என பலவிதத்தில் வேத அத்யாபன விருத்தியில் தனது வாழ்க்கையை ஈடுபடுத்திக்கொண்டு மன சஞ்சலத்திற்கு இடம் தராமல் வாழ்க்கையை நடத்திவரும் அத்துனை அத்யாபகர்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.சர்மா சாஸ்திரிகள்

Back to top